இது ஒரு தமிழ்த் திரவியம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட, வாழ்க்கைக்கு நல் வழி காட்டும் அருமை நூல். ஈரடிக் குறட்களால் உயரிய கருத்துக்களைத் தன்னகத்தே கொண்ட இந்த நூலை ஆக்கிய வள்ளுவர் இக் காலச் சென்னையில், தமிழகத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
திருக்குறள் மூன்று பாற்களாக, அறம், பொருள், இன்பம் என வகுக்கப்பட்டுள்ளது. இவை மேலும் இயற்களாகவும் அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டும் உள்ளன.
கீழே நீங்கள், குறளைப் பல வகைகளில் படிக்கலாம் அத்துடன் குறளில் இருக்கக் கூடிய சொற்களைத் தேடிப் பார்க்கவும் முடியும்.
3
பால்கள்
13
இயற்கள்
133
அதிகாரங்கள்
1330
குறட்கள்