ஆமையும் முயலும்
தூரத்தில் தெரியும் ஒரு மரத்தை இலக்காகக் கொண்டு முயலும் ஆமையும் தங்களது ஓட்டப் போட்டியை ஆரம்பித்தன. முயல் வேகமாக ஓடியது. ஆமையும் சளைக்காமல் ஓடியது. முயல் இடையில் ஓடுவதை நிறுத்தித் திரும்பிப் பார்த்தது. ஆமையைக் காணவேயில்லை. கொஞ்ச நேரம் படுத்து இளைப்பாறலாம் என்றெண்ணியது. அப்படியே அது நித்திரையாய்ப் போனது.
ஆமை நிற்கவில்லை. மெது மெதுவாகவே ஓடிக்கொண்டிருந்தது. நிற்காமல் ஓடிப் போட்டியின் முடிவை அடைந்தபின்தான் நின்றது. முயல் கொஞ்ச நேரத்தால் நித்திரை விட்டெழுந்து பார்த்தது. ஆமை வெற்றி பெற்று விட்டதைக் கண்டது. தான் தொடங்கிய வேலையை முடிக்காமல் வேறு விடயத்தில் கவனம் செலுத்தியதால், தான் தோற்றுவிட்டதை உணர்ந்து முயலுக்கு வெட்கமாகப் போய்விட்டது.