பொன் முட்டை
அவன் ஒரு பேராசை பிடித்தவன். வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டைதானே இடுகிறது. இதற்காக ஒவ்வொரு நாளாகக் காத்திருக்க வேண்டுமா? வாத்தின் வயிற்றுக்குள் தான் நிறைய தங்க முட்டைகள் இருக்கும். எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து விற்றால், ஒரே நாளில் மிகப் பெரிய பணக்காரன் ஆகலாம் என நினைத்தான்.
அதனால் விவசாயி எல்லா தங்க முட்டைகளையும் ஒன்றாக எடுப்பதற்காக, ஒரு கத்தியை எடுத்து வாத்தின் வயிற்றைக் கீறினான். வாத்து இறந்து விட்டது. அதன் வயிற்றினுள் ஒரே ஒரு தங்க முட்டை மாத்திரம் இருந்தது. வாத்து இறந்ததினால் ஒவ்வொரு நாளும் கிடைத்து வந்த தங்க முட்டையும் அவனுக்கு கிடைக்காமல் போய்விட்டது. விவசாயி கவலைப்பட்டு வருந்தினான். இப்போது வருந்தி என்ன பிரயோசனம். இறந்த வாத்து இறந்தது தான்.
சிந்தித்தால் சித்தி கிட்டும்