தமிழுக்குப் பெருமை செய்த எண்ணிறந்தவர்களிற் சிலரின் விம்பங்கள்
நறுந்தொகை
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
கல்விக்கு அழகு கசடற மொழிதல்
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்
அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது
பெருமையும் சிறுமையும் தான்தர வறுமே
ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா