வான வில்
நிலா நிலா இங்கே வா நீல வானை எட்டிப் பார் தூறல் போடும் வானமதில் தோன்றும் வான வில்லைப் பார் எழுவான் கதிரோன் வெள்ளொளியில் ஏழு நிறங்கள் தெரியுது பார் ஏழு நிறங்கள் என்னவென்று சொல்வேன் அதனைக் கேட்டுப் பார் பச்சை மஞ்சள் கரு நீலம் சேர்ந்து சிவந்த மஞ்சள் பார் சிவப்பு நீல நிறங்களுடன் சேர்ந்து விளங்கும் ஊதா பார் படித்த பாடம் வகுப்பறையில் சொல்லும் உண்மை இங்கே பார் வர்ண மாயை காட்டு மந்த விந்தை அழகை நேரிற் பார்