வண்ணத்துப் பூச்சி
வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப்பூச்சி பறக்குது பார் பறக்குது பார் அழகான செட்டை அழகான செட்டை அடிக்குது பார் அடிக்குது பார் சிவப்பு மஞ்சள் நீலம் பச்சை பொட்டுக்கள் பார் பொட்டுக்கள் பார் தொட்டது முடனே தொட்டது முடனே பட்டது பார் பட்டது பார் பூக்களின் மேலே பூக்களின் மேலே பறந்து போய் பறந்து போய் தேனதை உண்டு தேனதை உண்டு களிக்குது பார் களிக்குது பார் -வித்துவான் க. வேந்தனார்