தமிழுக்குப் பெருமை செய்த எண்ணிறந்தவர்களிற் சிலரின் விம்பங்கள்
ஆத்தி சூடி
அறம் செய விரும்பு
நல்வாழ்வு நடத்த ஆசை கொள்.
ஆறுவது சினம்
தணிய வேண்டியது கோபம்.
இயல்வது கரவேல்
நம்மால் முடிந்ததை ஒளியாமல் செய்ய வேண்டும்.
ஈவது விலக்கேல்
பிறருக்குக் கொடுப்பதைத் தடுக்கக் கூடாது.
உடையது விளம்பேல்
நம் திறமைகளை வெளியே சொல்லக் கூடாது.
ஊக்கமது கைவிடேல்
ஒரு காரியம் செய்யும் போது தடை ஏற்படுமானால் அதைக் கண்டு மனம் தளரக் கூடாது.
எண் எழுத்து இகழேல்
கணிதம் இலக்கியம் என்பவற்றை இகழ்ந்து பேசக் கூடாது.
ஏற்பது இகழ்ச்சி
யாசிப்பது இழிவு தருவதாகும்.
ஐயம் இட்டு உண்
பிச்சை இட்டு பின் உண்ண வேண்டும்.
ஒப்புர வொழுகு
உலகத்தின் போக்கு எப்படி என்று உணர்ந்து அதன் படி நடக்க வேண்டும்.
ஓதுவது ஒழியேல்
படிப்பதை விடக் கூடாது.
ஔவியம் பேசேல்
பொறாமை கொண்டு பேசக் கூடாது.
அஃகம் சுருக்கேல்
தானிய விளைச்சலை குறைக்கக் கூடாது.
- ஔவையார்