கொக்கும் நரியும்
கொக்கு விருந்துக்கு வந்த போது, நரி, ஒரு தட்டில் பாலை ஊற்றிக் கொக்கிடம் குடிக்கக் கொடுத்தது. கொக்கினது நீண்ட சொண்டினால் அந்தப் பாலைக் குடிக்க முடியவில்லை. நரி அதைப் பார்த்து சிரித்துவிட்டுத் தானே முழுப்பாலையும் நக்கி நக்கிக் குடித்து முடித்தது.
கொக்கு கவலையுடனும், வெட்கத்துடனும் திரும்பிப் போனது.
ஒரு நாள் கொக்கு நரியை தன் வீட்டுக்கு விருந்துக்கு வரும்படி சொன்னது. நரியும் வருகிறேன் என்று சொன்னது.
நரி விருந்துக்கு வந்த போது, கொக்கு, ஒரு மெல்லிய நீண்ட சாடியில் பாலை ஊற்றி நரியிடம் குடிக்கக் கொடுத்தது. நரியினால் நீண்ட சாடியில் உள்ள பாலைத் தன் நாக்கினால் நக்கிக் குடிக்க முடியவில்லை. நரிக்குத் தான் கொக்கிற்குச் செய்தது ஞாபகம் வந்தது.
நரி தன் பிழையை உணர்ந்து வெட்கித்தது.
இதைப் பார்த்த கொக்கு, நரியை மன்னித்து, ஒரு தட்டில் பாலை ஊற்றி நரிக்குக் குடிக்கக் கொடுத்தது. நரி மகிழ்ச்சியுடன் குடித்தது. விருந்து முடிந்ததும், நரி நன்றி சொல்லிக் கொண்டு போனது.
நன் நயம் செய்து விடல்