கன்றுக் குட்டி
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி. நாவால் நக்குது வெள்ளைப்பசு - பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு - மடி முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி - கவிமணி தேசிக விநாயகம்